லாடு லபக் தாஸ்

இப்படிக்கு பாலா மற்றும் பூபதி

Thursday, September 29, 2005

6.54326

"மொத்தம் 6.54326",
calculator காட்டியது.
இவ்வளவு precision தேவை இல்லை.
"மொத்தம் 6.54".
எழுதிவிட்டு அடுத்த sum'க்கு போனேன்.
விட்டுப்போன ".00326",
விம்மி அழுது ether'இல் கரைந்தது.

Wednesday, September 28, 2005

ஜனாதிபதி உரை

இந்த முறை சுதந்திரதின ஜனாதிபதி உரை படிக்க மறந்தவர்க்கு இதோ,
http://www.hindu.com/thehindu/nic/presidentiday.htm
நான் இது வரை ஜனாதிபதி உரைக்கு செவிசாய்த்ததில்லை.
ஆனால் இந்த முறை கலாம் பேச்சை படித்தேன்.
நீங்களும் படியுங்கள்.
பொருப்பான அர்த்தமுள்ள உரை.

Monday, September 26, 2005

friends தொடர் பாருங்கள்.

friends தொடர் பாருங்கள்.
கடந்த 3 மாதங்களாகத்தான் நான் பார்த்து வருகிறேன்.
Z Cafe'யில் இரவு 9 மணிக்கு.
மிக நன்றாக இருக்கிறது.
நமது கலாச்சார்ப்படி சில ஆச்சாரஙள் நடந்தாலும்,
அவை தவிர்த்து ரொம்ப அருமையாக இருக்கு இன்த தொடர்.
என்ன quality !!
சில தொடர்கள் இழுத்து கடித்து பல episode காண்கின்றன.
ஆனால் friends போல் சில மட்டுமே தரமுடன் பல நாள் நீடிக்கின்றன.
வரும் post'இல் friends தொடரின் தமிழாக்கம் காணலாம்.

Monday, September 19, 2005

பெங்களூரின் ..

பெங்களூரின் காற்று மாசு பட்டு,அதிகமாகவே கெட்டு விட்டது.மக்கள் தொகை அளவுக்கு மீறி தடித்து விட்டது.பயமாக இருக்கிறது.

demyக்கு அஞ்சலி.

demyக்கு அஞ்சலி.
பாலாவின் உற்ற நண்பன்.
inner ring road,bangalore'இல் helmet அனியாமல்,
வேகமாக ..
முடித்துக்கொண்டான் அவன் ஆயுளை.