லாடு லபக் தாஸ்

இப்படிக்கு பாலா மற்றும் பூபதி

Friday, October 21, 2005

மகாபாரதத்தில்

கன்னன் அர்ஜுனனுக்கு கீதையை சொல்லிக்கொன்டிருந்த சமயம்.
அர்ஜுனன் கரத்தின் காயத்தில் வழியும் குருதியைத் தேடி
ஈ ஒன்று அங்கு வந்தது.
கன்னன் சொல்லிய விசயம் அர்ஜுனனுக்கு விளங்கியதோ இல்லையோ
ஈக்கு நன்றாக விளங்கியது.
அது நாள் வரை guilty conscious'ஓடு கடித்துக்கொண்டிருந்ததாம் ஈ.
கீதை கேடு க்யானம் பெற்ற அடுத்த கணம் முதல்,
எந்த சங்கடமும் இல்லாமல் எதிர்படும் எல்லோரையும்
enthu'வுடன் கடிக்கத் தொடங்கியது
ஈ.
"போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கன்னனுக்கே"

Friday, October 14, 2005

module lead முத்துக்கருப்பன்

performance ehnacemnet algorithmn ஒன்றை
ஆழமாக யோசித்ததில்
மூளையின் முண்ணுறாவது நரம்பு பிசகி,
முழு நேரமும் nimans(mental hospital,blore)'இல் இருக்கிறார்
module lead முத்துக்கருப்பன்.
இவர் இப்படி இருக்க,
யாரோ யாருக்கு செல்லில் SMS'கிறார்கள்,
"மச்சான், நாளைக்கு KTVல என்ன படம்டா ?".

Tuesday, October 11, 2005

அதாவது

பாலாவோட போஸ்ட்ல பார்த்தது.

"If at first you don't succeed, find out if the loser gets anything."Bill Lyon

அதாவது,
ஒரு கல்யாணத்துக்கு போரீங்க. "பந்தி முடிஞ்சு போச்சு. இனி மதியான சாப்பாடுதான்"னு சொன்னா,
உடனே கிளம்பிடாதீங..
நேரா சமயகட்டுக்கு போயி மீந்த ஐட்டம் எதாவது இருக்கானு பாருங்க.
okay ?
ooooooookayyyy ?
okay ?

Thursday, October 06, 2005

பலகை

இடம்: விசாலாட்சியின் குடிசை வாசல்.
விசாலாட்சி வள்ளியிடம் சொல்லுவாள்,
கண்ண காட்ட போனேன். அந்த டாக்டரம்மா ஒரு பலகைய காட்டி..."இதுல என்ன தெரியுதுனு சொல்லு"னு சொல்லிச்சு. நான் கடகடனு சொல்லிப்புட்டேன். "
கட்
இடம் : டாக்டரம்மா படுக்கை அறை
டாக்டரம்மா அவள் கனவரிடம் சொல்லுவாள்,
அந்த பொம்பல board'ல இருக்குறதெல்லாம் correct'அ சொல்லிடுச்சு. ஆனா பாருங்க, திடீர்னு "டாக்டரம்மா இதோட சின்னதா சில number தெரியுது"னு சொல்லிட்டு ஏதோ numbers சொல்ல ஆரம்பிச்சிட்டா..very strange'ங்க. கட் இடம் : டாக்டரம்மா clinic
bacteria பங்கஜம் தன் பொண்ணு பத்மாவிடம் சொல்லுவாள்,
கண்ணு, இன்னைக்கு "30 to 39" 10 times எழுதுமா, செல்லம்!
மூற்றியது

Tuesday, October 04, 2005

பல்லக்கில் யார் ?

பல்லக்கு ஒன்று மெதுவாக வந்துகொண்டிருந்தது. அது ஒரு ப்ரதான சாலை.
அந்த காலை வேலையில் பல்லக்கு தூக்குவோரின் கால் ஓசை தவிர வேறு ஓசை ஏதும் இல்லை.
இந்த சாலை தான் அலசூரையும் ஓசூரையும் இணைக்கும் பெரும் பாதை.பல்லக்கு
பக்கதில் வந்து கொண்டிருக்கிறது. அலசூரை இப்பொழுது ராஷ்டகூட மன்னர்
தார சிங்கரின் ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசர் மல்லிகார்ஜுனரால் நிர்வகிக்கப்பட்டு
வருகிறது. அவரின் பிறந்த நாள் விழா நேற்று அலசூரில் பெரும் விழாவாக
கொண்டாப்பட்டது. ஆனால் மல்லிகார்ஜுனர் விழாவில் பங்கு பெறவில்லை. அவரின்
உடல் நலம் சரி இல்லை என்று காரணம் சொல்லப்பட்டது. பல்லக்கு இப்போது மிக
அருகில் வந்து விட்டது. பல்லக்கின் வெளியில் போர்த்தப்பட திரையில்
அலசோர் சிற்றரசர் முத்திரை நந்தியும் ராஷ்டகூட சாம்ராஜ்யத்தின் முத்திரை
நட்சத்திரமும் இருந்தது. பல்லக்கில் போகிரவர் ராஜ குடும்பத்தை சேர்தவர்கலாகத்தான்
இருக்க வென்டும். சட்டென்று பல்லக்கு திரை விலகிற்று. அதை விலக்கியது ஒரு அழகான
பெண் கரம். சற்று நேரத்தில் அந்த கரத்துக்குரிய முகம் தெரிந்தது.
ஆகா என்ன வடிவு. குறை எதும் இல்லாத வடிவு. ராஜ் கலை தழும்பும் முகம்.
திடீர் என்று அந்த காரியம் நடந்தது.
அந்த அம்மனி பல்லக்கை விட்டு இறங்கி,
சலை ஓரம் தூங்கி கொன்டிருந்த என் காதின் அருகே,
"பூபதி! இதோ நான் வந்துவிட்டேன்.
இனி நாம் இருவரும் இந்த உலகெங்கும் சுற்றி வாழலாம்.
எழுந்திரு !!" என்றாள்.