லாடு லபக் தாஸ்

இப்படிக்கு பாலா மற்றும் பூபதி

Wednesday, March 29, 2006

கதை கேளு கதை கேளு..

கிளை - I
நடையில் தளர்ச்சி கண்களில் முதிர்ச்சி என்று சோர்வாக நடந்து கொண்டிருந்தார் மணி ஐய்யர். ஒரு மாதத்தில் உலகம் இப்படி கூடவா மாறிவிடும். அன்பான தந்தை, அழகான மனைவி பிறக்க போகும் பிள்ளை என்று இன்பமாக இருந்த வாழ்வில் இன்று யாரும் இல்லாமல் அனாதையாய் போனார். இதே தெருக்களில் தன் தந்தையுடன் நடந்தது ஞாபகம் வந்தது. அன்று மனைவியயை பிரசவத்தில் இழந்த ஈஸ்வரன் ஐய்யர் இதே தெருக்களில் தன் ஏழு வயது மகனுடன் பாலக்காட்டிலிருந்து சென்னைக்கு வந்தார். நள பாகத்தில் பாகம் என்று இல்லாமல் மொத்ததையும் குத்தகைக்கு எடுத்திருந்தார் ஈஸ்வரன் ஐய்யர். மீன்குட்டிக்கு நீந்தவா கற்றுக்கொடுக்க வேண்டும், மணி ஐய்யரின் கைகளிலும் அதே பக்குவம் இருந்தது. இன்று அந்த கைகளில் ஒரு கரண்டி தூக்க கூட வலுவில்லாமல் போனது. ஒரு மாதத்திற்க்கு முன்பு ஈஸ்வரன் ஐய்யர் சிவ பதம் அடைய, குடும்ப சாபக்கேடோ என்னமோ பிரசவத்திற்க்கு போன மணி ஐய்யரின் மனைவி காமாட்சி கூடவே குழந்தையையும் கூட்டிச் சென்றாள். சோர்வாக வந்து திண்ணையில் சாய்ந்தார் மணி ஐய்யர். திடீரென்று அந்த அதிகாலை வேளையில் வீறிட்டு அழும் குரல் ஒன்று வீட்டின் பின்புறத்திலிருந்து கேட்டது. என்ன என்று பார்த்த மணி ஐய்யர் திடிக்கிட்டார். யாரோ பிறந்த குழந்தையயை போட்டு விட்டு சென்றிருக்கிறார்கள். சுத்திமுத்தி பார்த்த மணி ஐய்யர் யாரும் இல்லாமற் போகவே, மெதுவாக குழ்ந்தையின் பக்கத்தில் வந்து அதை தூக்கினார். அவர் கைகளில் கொஞ்சம் வலு வந்தது போல் தெரிந்தது.

0 Comments:

Post a Comment

<< Home