லாடு லபக் தாஸ்

இப்படிக்கு பாலா மற்றும் பூபதி

Thursday, August 19, 2004

எங்கே செல்லும் இந்தப் பாதை???

கேரளா போயிட்டு வந்ததுக்கப்புறம் அதைப் பத்தி நிறைய எழுதணும்னு ஆசை... ஆனா குணா கமல் மாதரி அருவியாக கொட்டின வார்த்தைகள் எல்லாம் வந்து முட்டினதால எனக்குள் இருந்த எழுதாளன் இப்போ ஆஸ்பத்திரில Serious-அ படுத்திருக்காரு. அதனால இந்தப் பதிவை நானே எழுதலாம்னு ஒரு திடுதிடுப்பான முடிவு எடுத்திருக்கேன். ஆனா...ஒரு Proffesional எழுத்தாளனா இல்லாததனால எதைப் பத்தி எழுதன்னு தெரியலை..."நான் Technology மாறப்போறேன்..." அப்படின்னு ஒரு அறிக்கை விட்ட பிறகு ஒரே Reactions-ஆ இருக்கு. அதுவும் இப்போ அங்கியும் இல்லாம இங்கியும் இல்லாம ஒரு திரிசங்கு நிலை. எனது நண்பன் அடிக்கடி என்கிட்ட வந்து.. " நீங்க Oracle-ஆ?? .Net-ஆ??" அப்படின்னு கேக்க நானும் நாயகன் கமல் மாதரி உதட்டைப் பிதுக்கி கண்ணீரை அடக்கி "தெரியலையேப்பா!!!"ன்னு சொல்ல வேண்டியதாயிருக்கு. "அடப்பாவி ரெண்டு வருஷம் இப்படி வேலை பண்ணிட்டு Technology மாத்தறியே... மாறாம இருந்தினா உன்னை America-ல மைக்கேல் ஜாக்சன் கூப்பிடுவாக ஜப்பான்-ல ஜாக்கி சான் கூப்பிடுவாக" அப்படின்னு TeamMates advice. "ஆண்டவன் நம்ம தலையில அப்படித் தான் எழுதிருக்கான்" அப்படின்னு ரஜினி ஸ்டைலில் ஒரு டையலாக் சொல்ல வேண்டியதாயிருக்கு. "நல்லா யோசிச்சிக்கோ..அங்க போயிட்டு சரியா Perform பண்ண முடியலைன்னா திரும்பி வந்திடலாம்ன்னு நினைக்காத. உன்னை சத்தியமா இங்க சேத்துக்க மாட்டேன்" அப்படின்னு Manager Indirect மிரட்டல். அதுக்கு "நான் முடிவுப் பண்ணிட்டேன் நான் விளையாட வேண்டிய Ground இது இல்ல அது.."ன்னு கில்லி விஜய் மாதரி பிஸ்த் டையலாக் வேற. ஆனா இந்த முடிவுன்னால ரொம்ப குழம்பி போயிருக்கிற ஆளு வேற யாருமில்லை நான் தான். எனக்கேத் தெரியலை நான் ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தேன்னு. ஆயிரம் கேள்விகள். எதுக்குமே பதில் இல்லை. இந்த வாதங்களோட இப்போதைய ஆமேன் வார்த்தை "பார்ப்போம்".

கீட்ஸோட இந்த வரிகள் தான் அடிக்கடி ஞாபகம் வருது...
Two roads diverged in a wood, and I --
I took the one less traveled by,
And that has made all the difference.

நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த விஷயத்தை பத்தி சொன்னதும் ஞாபகம் வருது...
வாழ்க்கை என்பது ஒரு இருட்டு அறையில கண்ணைக் கட்டிக் கொண்டு இல்லாத ஒரு கருப்பு பூனையைத் தேடுவது போல..

இப்போ என் நிலமை அப்படித்தான் இருக்கு. "பார்ப்போம்". :)

பி.கு: பாக்குற எல்லாருக்கிட்டேயும் புலம்பி புலம்பி இப்போ ஆள் கிடைக்காத்தனால இங்கேயும் வந்து புலம்ப வேண்டியதாப் போச்சு. ஆனா இன்னைக்கு Quota fill ஆயிடிச்சி..அதனால நல்லா தூக்கம் வரும்.

Friday, August 06, 2004

கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு...

யனிக்கு ஒஃபிஸில ஒரு வாரம் லீவு I கிட்டி...

ஞான் கொறைச்சு கேரளா J போயி...

இன்னும் ஒரு வாரத்துக்கு ஈ Blog-க்கு லீவு ஆக்கும்...

பக்ஷே ஒரு வாரம் கழிச்சு திருச்சி வரணும்..மனசில்லாய்யோ???Monday, August 02, 2004

Bad Times of India

காலையில் எழுந்தவுடன் நான் முதலில் தேடும் ஒரு விஷயம் - Newspaper. பல் தேய்ப்பது கூட அப்புறம் தான். தற்சமயம் என்னைக் காலையில் வறவேற்ப்பது Times of India. இதில் செய்திகளைத் தவிர எல்லவற்றையும் நன்றாக கவர் செய்கிறார்கள். Streamer என சொல்லப்படும் Newspaper Title-ல் "Times Of India" என்கிற கொட்டை எழுத்துகளின் இரு பக்கமும் இரண்டு துவார பாலிகைகள் வீற்றிருப்பார்கள். குறிப்பாக இவர்கள் தங்கள் உடம்பைக்கூட மறைக்கமுடியாத எழைப் பெண்களாக இருப்பார்கள். வெளிநாட்டுச் செய்திகளில் பெண் பாப் பாடகிகளைத் தவிர்த்து வேறெதையுமே TOI நியுஸாக கருத மாட்டார்கள். Business Section-ல் கண்டிப்பாக ஒரு ஜப்பானிய தொழில்நுட்பக் கருவியின் வெளியீட்டு விழாவின் புகைப்படம் போட்டு இருப்பார்கள். அங்கேயும் கருவியை விட்டுவிட்டு அதைப் பிடித்திருக்கும் பெண்ணைக் கவர் செய்திருப்பார்கள். விளையாட்டு செய்திகளில் எப்படியும் Sharapova, Kournikova service குனியும் ஃபோட்டோ தான் போடுவார்கள். இதைத் தவிர வேறு எங்கெல்லாம் இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் Baywatch புகைப்படங்களால் நிரப்பியிருப்பார்கள். இவர்களின் பட்ஜெட் ஸ்பெஷல் தாங்க முடியவில்லை. ஒரே Graphics மயம். சோனியாவை Trinity(Matrix)-யாக காமிப்பது போன்ற கிராஃபிக்ஸிலிருந்து ஆரம்பித்து மிட்நைட் மசாலக்களிலிருந்து புகைப்படங்களை பொறுக்கி எடுத்து போட்டு இருந்தார்கள். இதெல்லாம் பத்தாதென்று பேப்பர் முழுவதும் அரைகுறை ஆடை அணிந்த அம்மணிகளால் அலங்கரித்திருந்தார்கள்.(சே... ரொம்ப 'ஆ'(A) ஆயிடிச்சு...). ஒருவேளை பட்ஜெட்டில் துண்டு விழுவதை சிம்பாலிக்காக உணர்த்தினார்கள் போலும். இதெல்லாம் பத்தாதென்று Bangalore Times எனும் Supplement-ஐ 'அந்த' மாதரி புகைபடங்களுக்காக்வே சமர்ப்பணம் செய்திருக்கிறார்கள். ஆடைக்குறைப்பு Mainstream சினிமாவைத் தாண்டி Mainstream பேப்பருக்கு பரவியிருப்பது நாம் வருத்தப்பட வேண்டிய விஷயம்.