லாடு லபக் தாஸ்

இப்படிக்கு பாலா மற்றும் பூபதி

Tuesday, July 13, 2004

Young Sports பத்திரிக்கை விவகாரம்....

1993ஆம் ஆண்டில் புது டில்லியில் ஆரம்பித்த இந்த ஆங்கிலப் பத்திரிக்கை முதலீட்டார்கள்(Venture Capitalists) யாரும் இல்லாத காரணத்தினாலும் ஏற்பட்ட நட்டத்தினாலும் அதே ஆண்டு மூடப்பட்டது. இதைப் பற்றி Google-ல்
தேடினாலும் கிடைக்காது ஏனென்றால் இது நானும் என் நண்பனும் ஒன்பதாங் க்ளாஸ் படிக்கும் போது ஆரம்பித்த வார இதழ்.
இந்த பத்திரிக்கையின் ·பார்முலா ரொம்ப சிம்பள்...
1 Cover Story..(அதுவும் அந்த செய்தி விளையாட்டுச் செய்தியாக இருக்க வேண்டும் என்பது எங்களின் ஒருமித்தக் கருத்து)
1 தொடர் நாவல்...இதற்கான எங்களின் தேர்வு..Hound of Baskervilles)
கொஞ்சம் திகைப்பூட்டும் செய்திகள்...
கொஞ்சம் Current Affairs...
கொஞ்சம் புதிர் விளையாட்டுகள் இத்யாதி...
என ஆரம்பித்தோம்...
ப்ரதிகளுக்காக நாங்கள் நம்பியிருந்தது xerox தான்...அதுவும் ஒரு பக்கத்துக்கு ஐம்பது பைசா...
இதைக் குறைப்பதற்க்காக xerox கடை அக்காவை காக்கா பிடித்தது பலனில்லாமல் போனது.
எங்களின் பத்திரிக்கையோ எட்டுப் பக்கம்...முதலில் ஐந்து ரூபாயாக வைத்து யாரும் வாங்காமல் போனதால் நான்காக மற்றினோம்..
அதுவும் பலனளிக்கவில்லை...
கடைசியாக என் அப்பாவுடன் வேலைப் பார்த்தவர்களின் வீட்டில் இதை இரண்டு வாரம் விற்றோம்...
பின்பு அதுவும் பெரியப் பாளையத்து அம்மனுக்கு டொனேஷன் கேட்பது போல் ஆனதால் அதையும் கைவிட்டோம்...
அப்பொழுது நான்கு ரூபாய்க்கு ஆனந்த விகடனே கிடைக்கும்...
எப்படி IBM என்ற முதலையிடம் apple என்ற சின்ன மீன் மாட்டிக்கொண்டதோ....
அதே மாதரி Times,India Today போன்ற பெரிய பத்திரிக்கைகளின் போட்டியினால் Young Sports இரண்டே வாரத்தில் சமாதி ஆனது.
இந்தியப் பத்திரிக்கை வரலாற்றில் ஈடுகட்டமுடியாத பேரிழப்பாக ஆனது.
இதில் ரொம்ப மறக்க முடியாத, சந்தோஷமான விஷயம்.. என் அப்பா இந்த பத்திரிக்கையைப் பார்த்து விட்டு பாராட்டியது தான்....
ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் யாதெனில்...

0 Comments:

Post a Comment

<< Home