லாடு லபக் தாஸ்

இப்படிக்கு பாலா மற்றும் பூபதி

Friday, July 30, 2004

முதலாளித்துவம் - பொதுவுடைமை

கொஞ்ச நாளாப் போயிக்கிட்டிருக்குற Debate இது. சரி நாமளும் சேர்ந்து குட்டையை குழுப்புவோமே...

Argument1:  மழை பொதுவுடமை 1
Argument2: முதலாளித்துவம் vs. பொதுவுடைமை
Argument3: மழை பொதுவுடமை 2
Argument4: முதலாளித்துவம் vs. பொதுவுடைமை 2
Argument5.... கீழே....
(Points refer to corresponding points in argument 3)
1.அங்க இருக்குற supply-demand eqn அப்படி இருக்கு...இதெ நிறைய நிலம்...கம்மி கூலிக்காரங்க இருந்தாங்கன்னா...அப்படியேவா இருக்கும்???
2.மனிதன் வேட்டையாடித் திரியும் காலத்தில் சமமாகவா பகிர்ந்து சாப்ட்டு இருப்பாங்க? உங்க தலைல கல்ல தூக்கிப் போட்டுட்டு கைல இருக்கறத பிடுங்கிட்டு போயிருப்பேன்..இப்ப இருக்கற security எங்கேயும் கிடைக்காது
3.எதுக்கு எனக்கு உதவி பண்ணுறக் கருவிகளுக்கு நான் சொந்தக்காரனா இருக்கனும்??சொல்ல போனா தச்சன் மகன் தச்சனாக இருக்க வேன்டும் என்ற மனபோக்கை உடைத்ததே தொழில் வளர்ச்சி தான்.
4. மண்ணாசை, பெண்ணாசை இதெல்லாம் என்ன செய்தாலும் போக்க முடியாத விஷயம். அன்னைக்கு எதுனாலும் அடிச்சி வாங்கிகிட்டான்..இன்னைக்கு அப்படி பண்ண முடியாம சட்டம் இருக்கறதனால சூழ்ச்சி பண்றான்.
5. நீங்க விபச்சாரம் என்னவோ அடிப்படைத் தேவைகள் இல்லாததனால மட்டும் உருவாகறாங்கங்கற மாதரி சொல்லறீங்க...மானகரங்களில் நடக்கற  Call girls business-ல இருக்கற பல பெண்கள் வசதியான குடும்பத்துல இருக்குறவங்க தான்.
 நான் முதலாளித்துவம் தான் சரி இல்ல பொதுவுடமை தான் சரின்னு சொல்லல...முதலாளித்துவம் இருக்கனும் அதே சமயத்துல இருக்குற எல்லாருக்கும் அடிப்படை வசதிகளான உணவு,உடை,இடம் மற்றும் கல்வி கிடைக்கணும்.அதுக்கு தான் அரசாங்கம்னு ஒண்ணு  இருக்கனும். அப்படி அரசாங்கத்தால செய்யமுடியலைன்னா அது அரசாங்கத்தோட தப்பே தவிர அந்த முறைல இல்லை.
ஒரு குழுவாக ஒரு இடத்துக்கு போயி  சேரணும்னு வச்சிக்குவோம்...
பொதுவுடமை:
இதுல வேகமா போறவன் மெதுவாக நடக்கறவன் வேகத்துக்கு நடக்கணும்ங்கற மாதரி ஆகிடும். இது வேகமாக போறவனுக்கு அனீதியாகிடும்.
முதலாளித்துவம்:இதுல வேகமா போறவன் வேகமாக போயிடுவன். மெதுவாக நடக்கறவன் போயி சேரவேமுடியாது.இது மெதுவாக போறவனுக்கு அனீதியாகிடும்.
அரசாங்கம்(பொதுவுடமை+முதலாளித்துவம்):
இது இரண்டு பேரையும் ஒரு compromise-க்கு கொண்டு வர்ற விஷயம். வேகமா போறவனை ரொம்ப ஓட விடாம அவனை மெதுவாக வர்றவனுக்கு help பண்ண சொல்லி அதே சமயம் Slow-வா வர்றவனையும் கொஞ்சம் fast-ஆ நடக்கறதுக்கு வழி பண்ணனும். ஒரு நல்ல அரசாங்கத்தக்கு இதுதான் அடையாளம். திருத்தங்கள் பண்ண வேண்டியது Ideas-ல இல்லை அதோட Implementation-ல தான்.

2 Comments:

Blogger 性爱 said...

I am totally nude come see me. Take a bit for all pics and movies to load.

Why do I do this I like to make men blow their jiz in their pants.

Visit me.性爱

4:51 PM  
Blogger அக்னி சிறகு said...

முந்திய பதிவு வைரஸ் போல் இருக்கின்றது. அன்பரே அதை நீக்க முயற்ச்சியுங்கள். இல்லையெனில் கூகுளுக்கு புகார் செய்யுங்கள்.

6:59 AM  

Post a Comment

<< Home