லாடு லபக் தாஸ்

இப்படிக்கு பாலா மற்றும் பூபதி

Tuesday, July 13, 2004

சாம் மாமாவின் ஒற்றர்படை கதைகள் - அல்ட்ரிச் ஏம்ஸ்(Aldrich Ames)

இந்த பெயரைக் கேட்டாலே CIA-வில் உள்ள பல பேருக்கு ரத்த அழுத்தம் குபுகுபு வென எகிரும். CIA-வின் வரலாற்றிலேயே ஒரு மிகப் பெரும் ராஜதுரோகியாக விளஙகியவர்.இந்த வாரம் செவ்வாய்கிழமையென்று எல்லா சேனல்களுமாக சேர்ந்து என்னை கைகழுவி விட ஒவ்வொறு சேனலாக கூடு விட்டு கூடு பாய்ந்து எனது ரிமோட் நின்றது டிஸ்கவரி சேனலில். அதில் கண்ணாடி போட்ட ஒரு ஆசாமி கூலாக பேட்டி கொடுத்து கொண்டிருந்தார். சரி, எதோ ஒரு துறையில் பெரிய சாதனை செய்தவர் என்று பார்த்தால் பின்னர் தெரியவந்த்து 10 வருடம் CIA-விலிருந்து KGB-க்கு புதுப்படம் ரிலீஸ் செய்வது போல பல ரகசியஙகளை வெளியிட்டிருக்கிறார். CIA-வுக்கு வேலை செய்து கொண்டிருந்த 20 KGB ஒற்றர்கள், 2 Directorகள், பல enquiry-கள் என எல்லாவற்றையும் ஸ்வாஹா செய்து விட்டு கில்ஃபான்சியாக இருந்திருக்கிறார். இதில் கூத்து என்னவென்றால் ஏம்ஸின் வேலை KGB ஆபிஸர்களை recruit செய்வதும், CIA-வில் இருக்கும் துரோகிகளை கண்டுபிடிப்பது தான்.இவர் வேலையென்று பெரிசாக எதுவும் செய்து விடவில்லை. இவருடன் கூட வேலை பார்த்தவர்கள் நன்றாக உழைத்து இவரை கண்கலங்காமல் பார்த்துக்கொண்டார்கள். இவர் CIA-வில் காலம் தள்ளிய 20 வருடத்தில் இவர் recruit செய்த ஒரே ஒற்றர் - கொலம்பிய தூதரகத்தில் வேலை பார்த்த பெண்மணி ரொசாரியோ. அவரையே ஆறு மாதங்கள் கழித்து கல்யாணம் செய்து கொண்டார். நம்மூர் மர்ம நாவல்களில் வரும் வில்லன்கள் போல இவர் அப்பாவி கேரக்டராகவே வாழ்ந்து வந்திருக்கிறார். 1985-இல் தனது கடன் தொல்லைகளை தீர்ப்பதர்க்காக ரகசியங்களை வெளியிட்ட ஏம்ஸ் பின்னர் அதையே தொழிலாக மாற்றிக் கொண்டு விட்டார். பின்பு 10 KGB துரோகிகளின் பெயரைப் போட்டு குடுத்து $2 மில்லியன் டாலர்களை ரஷ்யர்களிடமிருந்து பரிசாகப் பெற்றார். அவர்களுக்கே உரிய பாணியில், KGB பத்து பேரையும் பரலோகம் அனுப்பிவிட்டது. இது அப்போது இருந்த CIA Director William Casey-க்கு பெரிய தலைவலியாக போய்விட்டது. உடனே ஒரு enquiry கமிஷன் ஒன்று வைக்கப்பட்டது. அதற்குள் இரான் பிரச்சனை, CIA-வின் விசாரனை முறைகளென பல பூகம்பம் வெடித்து விட இதை கொஞ்சம் மறந்துவிட்டார்கள். சோவியத்து யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னரும் இவர் சும்மா இருந்து விடவில்லை, ரஷ்யாவிற்காக ஒற்றர் வேலை பார்க்க ஆரம்பித்தார். தொடர்ந்து KGB-யில் இருந்த தனது ஆட்கள் குறையவே வேறு வழி இல்லாமல் CIA தனது பரம எதிரியான FBI-யின் உதவியை நாடியது. இவர்கள் இருவரின் கூட்டு முயற்சியில் பல சந்தேகிகள் பட்டியல் தயார் செய்யப்ப்ட்டது. எல்லா பட்டியல்களிலும் தலைவர் இடம் பெற்றார். பிறகு இவருக்கு பல Lie Detector டெஸ்டுகள் நடந்தன. சோர்வாக நடிப்பது, மிகவும் ரிலாக்ஸ்டாக காமித்துக்கொள்வது, Polygraph Tester-இடம் "மாமன், மச்சான் செளக்கியமா?"எனப் பல டகாய்டி வேலை செய்து எஸ்கேப் ஆகிவிட்டார். பங்களா, Jaguar car, சொகுசு பயணங்கள் என இவரது ஆடம்பர வாழ்க்கை பெரும் சந்தேகத்தை கிளப்பியது. கேட்டதற்கு மனைவியின் பூர்வீக சொத்து என்று பூருடாவிட்டார். நோண்டிப் பார்த்ததில் தாத்தாவும் இல்லை உயிலும் இல்லை. கடைசியில் மாமியார் வீட்டுக்கு போய்விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வெனிசுவெலாவில் ரகசியங்களை விற்றுவிட்டு வந்தவரை FBI மாமியார் வீட்டிலேயே தள்ளியது. தனது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும்,5 வயது மகனுக்கு மாதம் $500 குடுக்க வேண்டும் எனப் பல கண்டிஷனுக்கு பிறகு வாயைத் திறந்தார். போதாகுறைக்கு "நான் CIA சீர்திருத்தவாதி"என்று டயலாக்கெல்லாம் விட்டார். ஏம்ஸ் CIA-க்கு ஒரு மிகப் பெரியப் பாடமாக அமைந்தார். ஏம்ஸ் நிகழ்ச்சிக்கு பிறகு CIA ஏஜண்டுகளை கண்கானிப்பதற்க்காக வருடம் $3 பில்லியன் வரை செலவு செய்கிறது.மேலும் ஏஜண்டுகள் தங்களது வரவு செலவு கணக்குகளை காமிக்க வேண்டும் என்றும் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
(அடுத்த கதையுடன் விரைவில் சந்திக்கிறேன்...)
பி.கு: எழுத்துப் பிழைகளை மன்னிக்கவும்

0 Comments:

Post a Comment

<< Home